சிவமோக்கா சிறையில் மோதும் விஜய்-விஜய்சேதுபதி. தளபதி 64  படப்பிடிப்பு திடீர் மாற்றம்..

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தது. அடுத்து 3ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிவமோக்கா என்ற இடத்தில் உள்ள சிறையில்  நடக்க உள்ளது. இதில் விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக உள்ளன. இவர்களுடன் ஆண்டனி வர்கிஸும் இணைகிறார். டிசம்பர் 1ம் தேதி முதல் இங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.   கைதி படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். ஹீரோயி னாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் பெரும்பகுதி முடிந்தது. சாந்தனு, கவுரி உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் வாக்கில் திரைக்கு வருகிறது.
More News >>