அனுபாமாவுடன் கிசுகிசுக்கப்பட்ட பும்ராவுடன் மற்றொரு நடிகை காதல்..? என்ன சொல்கிறார் ஹீரோயின்..
இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா அடுத்து அடங்க மறு, சங்கத்தமிழன் படங்களில் நடித்தார்.
இவரிடம் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவை காதலிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு பதில் அளித்தார் ராஷி கண்ணா. 'நீங்கள் சொன்ன பெயரில் கிரிக்கெட் வீரர் இருப்பது தெரியும். அவரை பற்றி வேறு எதுவும் எனக்கு தெரியாது. இந்த கிசுகிசுப்ற்றி ஏற்கனவே நான் பதி அளித்திருக்கிறேன்' என்றார்.
ராஷி கண்ணாவே கடந்த வாரம் அளித்த ஒருபேட்டியில். 16 வயதில் பையனுடன் நான் டேட்டிங் சென்றேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கிரிக்கெட் வீரர் பும்ரா எந்த நடிகையையாவது காதலிக்கிறாரா இல்லையா என்பதை இதுவரை அவர் தெளிவுபடுத்தவில்லை ஆனால் அவரது பெயர் ராஷி கண்ணா தவிர ஏற்கனவே கொடி படத்தில் நடித்த அனுபாமா பரமேஸ்வருடனும் இணைத்து பேசப்பட்டது. அந்த காதல் கிசுகிசுவை யும் அனுபாமா மறுத்திருந்தார்.
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் ஆனால் இவர்களுக்குள் நெருப்பு இருக்கிறதோ. இல்லையோ ? ஏதோவொரு வகையில் மூவருமே தங்களுக்கு பெரிய பப்ளிசிட்டியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ராஷி கண்ணா அடுத்து தமிழில் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க விருக்கிறாராம்.