திராட்சை ஜூஸ் பேசியல் தரும் மாஜிக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே..
பெண்கள் அகத்தையும், முகத்தையும் எப்போதும் தூய்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். வயது அதிகரிக்க தங்களுடைய அழகு எங்கு குறைந்துவிடுமோ என்றும் பல வழிகளில் மெனக்கெட்டு வருகின்றனர்.
இவர்களுக்கான எளிய வழியில் திராட்சை பழம் ஜூஸ் கொண்டு பேசியல் இருக்கிறது. இதை ஒரு முறை செய்து பாருங்கள். உங்களுக்கே உங்கள் முக அழகை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
சரி, திராட்சை பழ சாறு கொண்டு பேஸ் பேக்குகள் எப்படி செய்றதுனு பார்க்கலாமா.. ??
அதிக வைட்டமின் சி கொண்ட திராட்சை பழம், நமது தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், இரவு தூங்குவதற்கு முன்பாக திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டு நன்கு காய்ந்த பிறகு கழுவிவிடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் சரும சுருக்கம் நீங்கிவிடும்.
இதேபோல், திராட்சையை நன்றாக அரைத்து அந்த பேஸ்டுடன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் உங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.
திராட்சை அரைத்த விழுது, அவகோடா அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வார்ட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.