ரஜினிக்கு வயசாயிடுச்சா.. தர்பாரில் நடந்தது தெரியுமா? இயக்குனர் முருகதாஸ் சொன்ன சீக்ரெட்..
By Chandru
கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடலாக வரும் சும்மா கிழி பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினியின் வயதை குறிப் பிட்டு இந்த வயதில் அவர் எப்படி ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியும் என்று விமர்சனம் வந்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் தர்பார் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை இயக்குனர் முருகதாஸ் தெரிவித்தார்.
'வயதை வைத்து ரஜினியை எடை போடாதீர்கள். தர்பார் ஷூட்டிங்கில் வியக்க வைக்கும் சம்பவங்களை நடத்திக் காட்டினார். ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் நாற்காலி ஒன்றை தூக்கி கேமரா நோக்கி வீச வேண்டியிருந்தது. அந்த நாற்காலி கனமோ கனம். எனவே காட்சியை இரண்டு ஷாட்டுகளாக பிரித்து ஒளிப்பதிவு செய்ய எண்ணினோம்.
ஆனால், அதை ஏற்காத ரஜினி நாற்காலியை அசால்ட்டாக தூக்கி வீசினார். ஒரே ஷாட்டில் இக்காட்சி படமாக்கப்பட்டது. ரஜினியின் இந்த எனர்ஜி எங்களை வியப்புக்குள்காகியது' என்றார் முருகதாஸ்.