கடைசியாக ஒப்புக்கொண்ட சமந்தா.. வெப் சீரிஸ் பற்றி ஏன் இந்த மவுனம்?
By Chandru
நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் சமந்தா திரைப் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் வரும் எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் யு டர்ன், ஓ பேபி போன்ற தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். அப்படங்கள் சமந்தாவுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.
கடந்த 2 வாரமாக பேமலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தா நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் எல்லாவற்றை யும் காதில் வாங்கிக்கொண்டு அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். தற்போது அமேசான் நிறுவனம் அந்த் வெப்சீரிஸ் பற்றிய 2 வது கட்ட படப்பிடிப்பு நடத்துவ்தை அறிவித்திருக் கிறது. இந்நிலையில் சமந்தாவும் வெப் சீரிஸில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
வெப் சீரியஸில் நடிப்பது தெரிந்தால் பட வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளதால் அதுபற்றி சமந்தா மவுனம் காத்து வந்ததாக கூறப்படுகிறது. கடைசியாக அந்த தகவலை சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார்.