போதை மருந்து பயன்பாட்டால் இளம் நடிகருக்கு தடை.. தயாரிப்பாளர் சங்கம் முடிவு..

கடந்த ஆண்டு டோலிவுட் திரையுலகில் போதை மருந்து பயன்படுத்தியதாக பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த பரபரப்பு அடங்கிய நிலையில் தற்போது மலையாள படவுலகில் போதை மருந்து விவகாரம் தலைதூக்கி உள்ளது. வெயில் மலையாள படத்தில் ஹீரோவாக ஷேன்நிகம் நடித்து வந்தார். இதற்காக வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்தி ருக்க இயக்குனர் தெரிவித்திருந்தார். அதன்படி ஹேர்ஸ்டைல் வைத்திருந்த நடிகர் ஷேன் படப்பிடிப்பு முடிவதற்குள் திடீரென்று அந்த ஸ்டைலை ஷேன்நிகம் மாற்றினார். இது இயக்குனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகருக்கும், இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டது.   இதுகுறித்து அப்படத்தின்  தயாரிப்பாளர் தங்களது சங்கத்தில் புகார் செய்தார்.  நேற்று கொச்சியில் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் நடிகர் ஷேன் நிகமிற்கு தடை விதிக்க தீர்மானிக்கப் பட்டது. ஷேன்நிகம் நடித்து வந்த வெயில், குர்பானி, உல்லாசம் ஆகிய 3 படங்கள் வெளிவர முடியாமல் தடைபட்டுள்ளதால் ரூ.7 கோடி வரையிலான நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு ஷேன் நிகம் தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.   மேலும் இளம் நடிகர்கள் பலர் போதைக்கு அடிமையாக உள்ளனர். போதை பொருள் பயன்படுத்துவதால்  ஒழுக்கக்கேடாக நடந்துகொள்கின்றனர். அவர்கள் பங்கேற்கும் படப்பிடிப்பில் போதை மருந்து குறித்து சோதனை நடத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது.   இதனை மறுத்திருக்கும் நடிகர் ஷேன் நிகம், 'எனது தரப்பில் என் நியாயத்தை சொல்ல யாரும் வாய்ப்பளிக்கவில்லை.  மலையாள நடிகர் சங்கம் (அம்மா) மற்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் போதை மருந்து ரத்த பரிசோதனை நடத்திக் கொள்ள தயாராக இருந்தாலும் நானும் ரத்த பரிசோதனைக்கு தயாராக இருக்கிறறேன்' என தெரிவித்தார்.
More News >>