புதிய பங்களா கட்டிவிட்டு தனியாக இருக்க பயந்த நடிகர்.. துணைக்கு அம்மாவை அழைத்து வந்தார்..
இது நட்சத்திரங்கள் வீடு வாங்கும் சீசன் போலிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் 142 கோடி மதிப்புள்ள பங்களாவை வாங்கினார் நடிகை பிரிங்கா சோப்ரா.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி பல கோடி செலவில் ஐதராபாத்தில் புதிய மாளிகையை கட்டி உள்ளார். தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா வாங்கியிருக் கிறார்.
ஆந்திரா ஸ்டார்கள் குவிந்து கிடக்கும் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில்தான் இந்த பங்களாவும் உள்ளது. பெரிய வீட்டை வாங்கிவிட்டு தனியாக இருக்க பயந்து கிடந்தார் விஜய்தேவரகொண்டா. தற்போது துணைக்கு தனது அம்மாவை அழைத்து வந்துவிட்டார்.
'இந்த வீட்டில் இருப்பதற்கு பாதுகாப்பான உணர்வை எங்களுக்கு என் அம்மா ஏற்படுத்தி தருவார். இந்த புதிய கட்டிடத்தை ஒரு வீடாக அவரால்தான் மாற்ற முடியும். புதுவீடு அம்மா வுக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. எங்களது இந்த பயணத்தில் ரசிகர்களாகிய நீங்களும் இருக்கிறீர்கள்' என தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.