உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்
தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசின் உள்துறை செயலாளராக இது வரை பணியாற்றி வந்த நிரஞ்சன் மார்டி இன்று(நவ.30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர், திருவள்ளூர் கலெக்டர் முதல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.