அமெரிக்காவின் சிறந்த அறிவியல் விஞ்ஞானிகள்: டாப் பட்டியலில் இந்திய மாணவன்!

அமெரிக்காவின் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் அறிவியல் விருதுக்கு அமெரிக்காவாழ் இந்திய மாணவர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்த விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் விர்ஜினியா ஸ்டேட் விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞானிகள் விருதுக்காக ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் அமெரிக்கழாவ் இந்தியர்கள் ஆவர்.

அருண் சன்யால், ப்ரதீக் நாயுடு ஆகிய இருவரும்தான் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அருண் சாயல் கணையம் தாக்குதல்களுக்கு புதுவித மருத்துவ முறையையும், 17 வயதான ப்ரதீக் நாயுடு புற்றுநோய்க்கான மருத்துவ முறையையும் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியதற்காக சிறந்த விஞ்ஞானிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ப்ரதீக் நாயுடு தற்போது அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு அறிவியல் மாணவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>