ரஜினியின் தர்பார். சும்மா கிழி 80 லட்சம் பேர் பார்த்து சாதனை... இது தலைவரின் அன்பு சாம்ராஜ்யம்..
By Chandru
ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 'தர்பார்'. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.
அனிருத் இசையில் தர்பார் படத்தில் இடம்பெறும் சும்மா கிழி பாடல் நேற்று முன் தினம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான 6 மணி நேரத்தில் 40 லட்சம் பேர் பார்த்தனர்.
தற்போது 24 மணிநேரத்தில் 80 லட்சம் பேர்கள் பார்த்து புதிய சதனையை படைத்திருக்கிறது. இன்று காலை வரை ஒரு கோடியே 18 லட்சம் பார்வைகளை பெற்று சாதனை புரிந்துள்ளது. தமிழ் திரையுலகில் அதிக பார்வையாள்ர்களை கடந்த பாடலின் லிரிக்கல் வீடியோ என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தலைவரின் அன்பு சாம்ராஜ்ஜியம். 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளை கடந்து, அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அனைவருக்கும் நன்றி என டிவிட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்துள்ளார். சும்மா கிழிபாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார்.
முன்னதாக இப்பாடல் ஏற்கெனவே வெளியான சில பாடல்களின் காப்பியாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்களை கடந்து பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.