பிரபுதேவா படத்துக்கு தடை விதியுங்கள்.. சாமியார்களை ஆட்டம்போட வைப்பதா?
By Chandru
சல்மான்கான் இந்தியில் நடிக்கும் படம் தபாங் 3ம் பாகம். பிரபுதேவா இயக்கி உள்ளார். இதில் அதிரடியும் இருக்கிறது., ஆட்டம் பாட்டமும் இருக்கிறது. ஆனால் இம்முறை ஆட்டம் கொஞ்சம் ஓவராக போய்விட்டதுபோல் தெரிகிறது.
சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் மகாமகத்துக்கு காவி வேட்டி கட்டி வரும் சாமியார்களை மேற்கத்திய பாணியில் கிதாரும் கையுமாக நடனம் ஆடுவதுபோல் காட்சி இடம் பெற்றுள்ளது. இக்காட்சி வில்லங்கத்தை இழுத்து விட்டிருக்கிறது.
'இந்து ஜன்ஜக்ருதி சமிதி' என்ற அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் சத்தீஷ்கரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் தேசிய தணிக்கைக் குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தபாங் 3, படத்தின் டிரைலரில் சாமியார்களும் இந்து தெய்வங்களும் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்திய பாணியில் சாமியார்கள் நடனம் ஆடும் காட்சிகள் உள்ளது. இது மத உணர்வை புண்படுத்துகிறது.
எனவே படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர். இது பட தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.