சூர்யாவின், சூரரை போற்று டீஸர் எப்போது? திடீர் அறிவிப்பு வெளியீடு...
By Chandru
காப்பான் படத்தையடுத்து சூர்யா வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படம் சூரரை போற்று. இப்படத்தை மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று வெற்றி படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார்.
2D எண்டெர்டைனென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கார்த்தி நடித்த தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் டீஸர் பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக இணைய தளத்தில் டீஸர் பற்றி தகவலை வேகமாக பரப்பி வருகின்றனர்.