சரித்திர படத்தில்  நடிக்கிறார் நெடுஞ்சாலை ஹீரோ.. 10 கிலோ எடை குறைக்கிறார்..

சமீபகாலமாக ஹாலிவுட்டிலிருந்து வெளியாகும் மித்தலாஜிகல் படங்களில் சரித்திர பின்னணியுடன் சில மாயாஜால வித்தைகளும் இணைத்து வெளியிடப்படுகிறது. அதுபோன்ற படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. பாகுபலி, ருத்ரமாதேவி போன்று மன்னர் கதைகள் சரித்திர படங்களாக வெளிவருகின்றன. இந்நிலையில் மித்தாலஜிகள் பாணி படம் ஒன்று தமிழில் பிரமாண்ட செலவில் உருவாகிறது. இதில் ஆரி ஹீரோவாக நடிக்கிறார். இவர் நெடுஞ்சாலை, மாயா.   ரெட்டசுழி, தரணி, உன்னோடு கா, நாகேஷ், திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.   ஏற்கும் கதாபாத்தரங்களுக்காக விக்ரம், சூர்யா போன்றவர்கள் உடலை வறுத்திக்கொண்டு தோற்றத்தை அதற்கேற்ப மாற்றி நடிக்கின்றனர். அதுபோல் இப்படத்துக்காக நடிகர் ஆரி 10 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்க உள்ளார்.   அவரது ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார். எஸ்.காளிங்கன் இயக்குகிறார் முருகு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன் இசை அமைக்கிறார்.
More News >>