ஃபிளிப்கார்ட் உடன் கைகோத்த மோடரோலா- அதிரடி ஆஃபர்களில் மொபைல் போன்கள்!

ஃபிளிப்கார்ட் உடன் மோடரோலா நிறுவனமும் கைகோத்து வாடிக்கையாளர்களைக் கவர அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் வணிகப் பக்கத்தில் 'மோடரோலா டே சேல்' என்ற அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விற்பனையில் மோடரோலா நிறுவனத்தின் மொபைல் போன்கள் சலுகை விலையில் விற்பனையாக உள்ளன.

இதன் அடிப்படையில் மோடோ ஈ4, மோடோ எக்ஸ்4, மோடோ ஜி2 ஆகிய மொபைல் போன்களுக்கு ஆஃபர் விலை உள்ளது. பிப்ரவரி 22 முதல் 24 வரையில் அறிவிக்கப்பட்டுள்ள 'மோடரோலா டே சேல்' விற்பனையில் 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர மோடரோலா ஸ்மார்ட்போன்களுக்கு 2000 ரூபாய் வரையில் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கூடுதலாக வழங்கப்படுவதால் ஆன்லைன் ஃபிளிப்கார்ட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

More News >>