ldquoபெண்கள் தலைநிமிர்ந்து செல்ல வேண்டும்rdquo: மாணவிகளுக்கு சோஃபி ட்ரூடே அறிவுரை

"பெண்கள் இந்த உலகை தலைநிமிர்ந்து எதிர்கொள்ள வேண்டும்" என கனடா பிரதமர் ட்ரூடேவின் மனைவி சோஃபி ட்ரூடே தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே ஒரு வார கால சுற்றுப்பயணமாக தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். இதுவரையில் ட்ரூடே குடும்பத்தினர் குஜராத், அகமதாபாத், பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில், டெல்லி என முக்கிய சுற்றுலாத் தளங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் விழாக்கள் எனக் குடும்பத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று டெல்லியில் நடந்த ஆசிய மாநாடு ஒன்றில் சிறப்பு விருந்தினராக சோஃபி ட்ரூடே பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில் சோஃபி பேசுகையில், "பெண்கள்தான் மனிதநேயத்தின் ஊற்று. ஒரு பெண் வளரும்போது சந்திக்க வேண்டிய சூழல்கள் அதிகம். அப்போது பயம் ஏற்படலாம். அதுகுறித்து கவலைப்படாதீர்கள்.

இந்த உலகை பெண்கள் தலைநிமிர்ந்து எதிர்கொள்ள வேண்டும். பயம் வேகமாகக் கரைந்துவிடும். குரலற்றவர்களின் குரலாக உங்கள் குரல் ஒலிக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒரு கனவு இருக்கும். அதை அறிந்து அதன் வழியேலேயே பயணியுங்கள். வெற்றி கிடைக்கும்" எனக் கூறினார்.

More News >>