கணவர் மீது நடிகை போலீசில் புகார்..   சீரியல் நடிகர் கைது..

வம்சம் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் ஜெயஸ்ரீ. அவரது கணவர் ஈஸ்வர் ரகுநாத். கல்யாணபரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக் கிறார்.  சென்னை திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். மனைவி ஜெயஸ்ரீக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து லட்சக்கணக்கில் ஈஸ்வர் கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதுசம்மந்தமாக கணவன் - மனைவிக்கு  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். சமீபத்தில் தகராறு முற்றியதில் ஜெயஸ்ரீயை ஈஸ்வர்  தாக்கியதாக கூறப்படுகிறது.   இதையடுத்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். புகாரின்பேரில்  விசாரணை நடத்திய  போலீசார், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர்.   சந்திராவின் வயது கருதி போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். ஈஸ்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
More News >>