ஜெயலலிதா படத்துக்கு போட்டியாக வரும் ஜெயலலிதா வெப் சீரிஸ்.. கவுதம்மேனன் தீவிரம்..
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். அதன் டீஸர் சமீபத்தில் வெளியானது.
அதேபோல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக குயின் என்ற பெயரில் உருவாகி றது. அதை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாதிரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
ஜெயலிதாவின் பள்ளி பருவம் தொடங்கி முதல்வர் ஆகி அரசியலில் சாதித்ததுவரை இதில் காட்சிகள் இடம்பெறுகிறது. தற்போது குயின் டீஸர் வெளியாகி உள்ளது. இதன் டிரைலர் வரும் 5ம் தேதி வெளியாகும் என டீஸரில் அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 4 மொழி களில் இந்த வெப் சீரீஸ் உருவாகிறது.