மிதாலிராஜ் வாழ்க்கை படத்தில் டாப்ஸி.. டோனி, சச்சின் படத்தை தொடர்ந்து உருவாகும் பயோபிக்..

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனி, சச்சின் டென்டுல்கர் வாழ்க்கை திரைப்படமானது. அதேபோல் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், வாழ்க்கையும் படமானது. தற்போது பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கையும் திரைப்படமாகிறது. இதில் மிதாலியாக டாப்ஸி நடிக்கிறார்.     இப்படத் துக்கு சபாஷ் மிது என பெயரிடப்பட்டிருக் கிறது. சமீபத்தில்தான் குறிபார்த்து துப்பாக்கி யால் சுடும் வயதான பெண் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார். இது பிரகாஷி டோனரின் வாழ்க்கை  கதையாக உருவானது.  அதைத் தொடர்ந்த டாப்ஸி, மிதாலி வேடம் ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிதாலிராஜ்  ஒரு தமிழச்சி.  தற்போது ஜோத்புரில் வசித்து வருகிறார். சர்வதேச, இந்திய அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிகளில் மிதாலி பங்கேற்று விளையாடி பல்வேறு சாதனைகள்  நிகழ்த்தி உள்ளார்.   மிதாலிராஜ் வாழ்க்கை சரித்தித்தில் நடிப்பதுபற்றி டாப்ஸி கூறும்போது, மிதாலி வாழ்க்கை கதையில் நடிக்க  கிடைத்த வாய்ப்பை மிகவும் பெருமையாக கருதுகி றேன். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலியின் பங்களிப்பு மிக முக்கியம் வாய்ந்தது.  அவரது வேடம் ஏற்று கிரிக்கெட் விளையாடி நடிக்கப்போகும் நாளை மிகவும்   ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறேன்' என்றார்.   ஏற்கனவே வித்யா பாலன் நடித்த கஹானி, கங்கனா ரனவத் நடித்த குயின்,  பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம், தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படங்களை  தயாரித்த வயாகாம்18 ஸ்டூடியோ மிதாலிராஜ் வாழ்க்கை சரித்திர படத்தையும் தயாரிக்கிறது.
More News >>