ஷாருக் படம் அட்லிக்கும் இல்லை, வெற்றிமாறனுக்கும் இல்லை.. வாய்ப்பை இரட்டை இயக்குனர்கள் தட்டிச் சென்றனர்

விஜய் நடித்த பிகில் படம் முடிந்தவுடன் இயக்குனர் அட்லி இந்தி நடிகர் ஷாருக்கான் படம் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. அதற்கேற்ப ஷாருக்கான் பிறந்தநாளில் அட்லி தனது மனைவியுடன் சென்றுகலந்து கொண் டார். இதற்கிடையில் அசுரன் படத்தை இயக்கிய வெற்றி மாறனையும் ஷாருக்கான் சந்தித்தார். அசுரன் படத்துக்கு வாழ்த்து கூறியதுடன் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.

இதனால் இருவரில் யார் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப்போகிறார் என்ற குழப்பம் எழுந்தது. அதற்கு பதில் அளிக்காமல் ஷாருக் மவுனம் காத்து வந்தார். தற்போது அட்லியும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை வேறு இயக்குனர் படத்தில் ஷாருக் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

ஷாருக் படம் இயக்கும் வாய்ப்பை பாலிவுட் இரட்டை இயக்குனர்கள் ராஜ், டீகே  தட்டிச் சென்றுள்ளனர். இவர்கள் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஷாருக். ஏற்கனவே, சோர் இன் த சிட்டி, கோ கோவா கான், ஹேப்பி என்டிங், ஏ ஜென்டில்மேன் போன்ற படங்களை இந்த இரட்டையர்கள்  இயக்கி உள்ளனர்.ஷாருக்கின் புதிய படம் ஆக்‌ஷன் காமெடியாக உருவாகவிருக்கிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஷாருக்கின் புதிய பட அறிவிப்பை அடுத்து அவரது ரசிகர்கள் அப்படம் பற்றி நெட்டில் வைரலாக தகவல் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து ஒரு ரசிகர் வெளியிட்டுள்ள மெசேஜில், 'பாலிவுட் பாட்ஷா முடிவெடுத்துவிட்டார்.. இனி நல்ல தூக்கம் வரும்' என குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>