சூப்பர் ஸ்டாருடன் இணைவது குஷ்புவா? மீனாவா? தலைவர் 168 ஹீரோயின் யார்..
By Chandru
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'தர்பார்' படத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்திற்கான் டப்பிங் பணிகளை 3 நாட்களில் பேசி முடித்து அசத்தினார்.
வரும் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அஜீத்தின் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவர் நடிக்கும் 168வது படமான இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்காலிகமாக தலைவர் 168 என்று பெயரிடப்பட்டி ருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்க உள்ளார்.
தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் குஷ்பு நடிக்க விருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில் தற்போது மீனா நடிக்க விருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி மீனாவிடம் கேட்டபோது அவர் அதை உறுதி செய்ய மறுத்துவிட்டார்.
மன்னன், பாண்டியன், அருணாச்சலம், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறார் குஷ்பு. அதேபோல் எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் மீனா.
குஷ்பு, மீனா பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தலைவர் 168 படத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டு வருகிறது.