ரம்யா பாண்டியனை அதிர வைத்த ஆபாச படங்கள்.. புகார் செய்ய தயாராகிறார்..
இணைய தள பக்கங்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். சேலை கட்டிய நிலையிலும் படுகவர்ச்சியாக தோன்றும் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரது பெயரில் இணைய தள பக்கத்தில் ஆபாச படங்கள், ஆபாச மெசேஜ்கள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து ரம்யா பாண்டியனுக்கு தெரியவந்த போது அதிரச்சி அடைந்தார். உடனடியாக செயல்பட்ட ரம்யா தனது இணைய தள கணக்கை வீடியோ எடுத்துவெளியிட்டு இதுதான் என்னுடைய ஒரிஜினல் இணைய தள அக்கவுண்ட் என் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி யாரோ ஆபாச படங்கள் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்த சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்திருக்கிறார்.