40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி,  கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். ஒரு கட்டத்துக்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்று ரகசிய உடன்படிக்கை செய்து கடந்த 40 வருடமாக அதை கடைபிடித்து வருகின்றனர். இதற்கிடையில் ஷங்கர் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்க  முயற்சி மேற்கொண்டனர. அது பலன் அளிக்கவில்லை.   தற்போது ரஜினியும், கமலும் சினிமாவில் நடித்து வரும் அதேவேளையில் அரசியல் அரங்கிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண் டிருக்கின்றனர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிவிட்டார். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கூறியிருக்கிறார். சமீபத்தில் கமலின் 60வருட திரையுலக சேவைக்காக பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இணைந்து பயணிக்க உள்ள தாக தெரிவித்தனர். இந்த திட்டத்தை அவர்கள் எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது தெளிவாகாத நிலையில் இருவரும் இணைந்து படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.     ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் 168வது படம் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதேபோல் கமல்ஹாசன் இந்தியன் 2ம் பாகம் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு கமல் நடிப்பிலிருந்து ஒதுங்கி தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் சிவா படத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க உள்ளார்.   சமீபத்தில் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை சந்தித்தார். இதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. அநேகமாக இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும். அப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க கமல் கெஸ்ட்ரோலில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.   ரஜினி, கமல் 40 வருடத்துக்கு பிறகு இணைந்து நடிக்க உள்ளதாக பரவும் தகவலை கண்ட ரசிகர்கள் நண்பர்கள் இருவரையும் காலம் ஒன்றிணைக்கிறது. இந்த இணைப்பு நடந்தே தீரும் என்கின்றனர்.
More News >>