மம்மூட்டி பட நடிகைக்கு காதலர் மிரட்டல்.. ஆசிட் வீசுவேன்...
By Chandru
மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த படம், பேரன்பு. இதில் திருநங்கை அஞ்சலி அமீர் என்பவர் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார். இவர் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்று காதலர் மிரட்டல் விடுத்திருக்கிறாராம்.
இதுகுறித்து அஞ்சலி அமீர் பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருப் பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்னுடைய காதலர் அனஸ் என் உணர்வு களை மதிக்க மறுக்கிறார். மனரீதியாக வும் உடல் ரீதியாகவும் தொந்தரவு தருகி றார். எனது நண்பர்களுடன் பேசவும் தடை விதிக்கிறார். அவரை விட்டு பிரிந்தால் ஆசிட் வீசிவேன் என மிரட்டுக்கிறார். மேலும் என்னுடைய சேமிப்பு பணம் சுமார் 4லட்சம் வரை அனிஸ் பறித்து கொண்டார். அவரால் ஏற்பட்ட டார்ச்சரை தாங்க முடியவில்லை, தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அஞ்சலி அமீரின் இந்த குற்றச்சாட்டை காதலர் அனிஸ் மறுத்துள்ளார். அஞ்சலி அமீரை நான் மிரட்டவில்லை. கடந்த 2 வருடம் லிவிங் டு கெதராக வாழ்ந்தோம். அவர் நண்பர்கள் அவருக்குத் தவறான ஆலோ சனைகளைச் சொல்கிறார்கள். எனக்கும் குடும்பம், வீடு இருக்கிறது. அஞ்சலி அமீருக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவர் விலகட்டும் என்று தெரிவித்திருக்கிறார் அனிஸ்.