தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது..மலையாள சூப்பர் ஸ்டார் நடுக்கம்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் கேரள பகுதிகளில் மாமாங்கம் என்ற திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம் ஒரு கட்டத்தில் இப்பகுதியை அதிகாரவார்க் அரசர்கள் கைப்பற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் போராடத் தொடங்கினார்.
அரச படைகளை எதிர்த்து குறைந்த அளவிலான நபர்களே போரிட்ட தால் மன்னரை நெருங்க முடியாத சூழல் இருந்தது. இந்த சரித்தர சம்பவத்தை் மைய வைத்து மாமாங்கம் படம் உருவாகி உள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் மம்முட்டி, உன்னி முகுந்தன் மாஸ்டர் அச்சுதன், பிராச்சி தெஹ்லான், இனியா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.பத்மகுமார் இயக்கி உள்ளார்.
இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் மம்மூட்டி கலந்து கொண்டு பேசினார்.
தமிழ்நாட்டில் மேடை ஏறி பேசுவதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது என்று சொன்னார் (இதனால் மம்மூட்டி அரசியல் பேசப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. உடனே தனது பேச்சை படத்தின் பக்கமே திருப்பிவிட்டார்)
மேலும் மம்மூட்டி பேசும்போது, இப்படத்துக்கு இயக்குனர் ராம் தமிழில் வசனம் எழுதி உள்ளார். நான் டப்பிங் பேசினேன். வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும் என்று என்னை பாடாய்படுத்தி எடுத்துவிட்டார். மாமாங்கம் ஒரு டப்பிங் படம்போல் இல்லாமல் நேரடி தமிழ் படம் போலவே வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. படத்திற்கு டப்பிங்கில் எப்படியோ சமாளித்து பேசிவிடுகிறேன்.
ஆனால் மேடையில் பேசும்போது தான் தடுமாறுகிறது. மாமாங்கம் ஒரு சரித்திர படம். இதுபோன்ற படங்களில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. பழங்கால மலையாளத்தில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கும் அதை அப்படியே இப்படத்தில் பயன்படுத்தி உள்ளோம்.
ழ, ற், ர் ஆகிய எழுத்துகளை உச்சரிக்க நான் சிரமப்பட்டேன். அதற்காக ராம் உடனிருந்த உதவி னார். சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் எண்ணத்தில்தான் மாமாங்கம் படம் உருவாக்கப்பட்டிருக் கிறது என்றார்.