தளபதி 64 அப்டேட் கேட்கும் பிகில் பட தயாரிப்பாளர்.. மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் எப்போது?
By Chandru
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தளபதி 63 படத்தை (பிகில்) தயாரித்திருந்தார் அர்ச்சான கல்பாத்தி. அடுத்து தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து தளபதி ரசிகர்கள் நெட்டில் வெவ்வேறு தகவல்கள் வெளியிட்டு வந்தாலும் அது அதிகாரப்பூர்வமானதாக இல்லை. சம்பவம் என்ற டைட்டிலுடன் தளபதி 64 பட போஸ்டரை ரசிகர்கள் வெளியிட் டனர். அதுவும் உறுதியற்ற தகவல்கள் தான்.
இந்நிலையில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் 'தளபதி 64' குறித்து அப்டேட் கேட்டிருக்கிறார். தளபதி 64 படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது ஃபர்ஸ்ட் லுக் தேதி அல்லது படம் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் உடனடியாக எங்களுக்கு வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.