பெண் டாக்டரை எரித்து கொன்ற 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. ஐதராபாத்தில் இன்று அதிகாலை பரபரப்பு..
By Chandru
ஐதராபாத். டிச. 6:
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்வம் நாடுமுழுவ தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர். அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள். மருத்துவ மாணவ, மாணவிகள்.
நடிகர், நடிகை என பலதரப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு உட்சப்பட்சதண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தினர். நாடாளுமன்றத்திலும் எம்பிக்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என குரல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா,சென்ன கேசவலு, நவீன் ஆகிய நான்கு பேரகளை தெலங்கானா போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் 4 பேரையும் இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸார் அழைத்து வந்து குற்ற சம்பவம் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு குற்றவாளிகள் 4 பேரும் தப்ப முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்களின் உடல் சத்நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த அதிரடி சம்பவத்தின்போது 3 போலீசார் காயம் அடந்தனர்.
போலீசாரின் இந்த தடாலடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெண்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டினார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு திரண்டு வந்த மக்கள் போலீசாரை தோள் மீது தூக்கிவைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.