என்கவுன்ட்டர் நடத்திய  போலீஸ் கமிஷனர் விசி சஜ்னாருக்கு பாராட்டு குவிகிறது.. சம்பவம் பற்றி பரபரப்பு பேட்டி..

ஐதராபாத், டிச 6:   ஐதராபாத்தில் கடத்தி கொல்லப்பட்ட பெண் டாக்டரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது  தெலங்கானா போலீஸார் என் கவுன்ட்டர் செய்து சுட்டு தள்ளினர். இந்த சம்பவம் பற்றி சம்சாபாத் பகுதி துணை கமிஷனர் பிரகாஷ் ரெட்டி கூறியது:4 குற்றவாளிகளையும்  சைபராபாத் பகுதி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு   அழைத்து சென்றனர். குற்றம் எவ்வாறு  நடந்தது என்று அவர்களிடம் போலீஸார் கேட்டனர்.  உடனே அவர்கள் போலீஸாரின்  துப்பாக்கியை பிடுங்கி  சுட முயன்றனர். தற்காப்பிற்காக அந்த நான்கு பேரையும் போலீஸார் என்கவுன்டர் செய்தனர்.   இவ்வாறு அவர் கூறினார்.   சைபராபாத் போலீஸ் கமிஷனர் விசி சஜ்னார்,  இந்த என்கவுண்டர்  தகவலை உறுதிப்படுத்தினார். அவருக்கும் ஐதராபாத் போலீசாருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. அத்துடன்  விசி சஜ்னார் பெயர் இணைய தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
More News >>