டாக்டர் ஆகும் சிவகாரத்திகேயன்.. அவசரமாக டைட்டில் வைத்தது ஏன்?
By Chandru
நயன்தாரா, யோகி பாபு நடித்த படம் 'கோல மாவு கோகிலா'. நெல்சன் இயக்கியிருந்தார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
இப்படத்துக்கு டாக்டர் என பெயரிடப்பட்டி ருக்கிறது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இதில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தில் நடித்தவர். இவர்களுடன் யோகி பாபு, முக்கிய வேடத்தில் நடிகர் வினய் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.
சிவகார்த்திகேயன், யோகி பாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்சமீபகாலமாக புதிய படங்களுக்கு ஹீரோக்கள் டைட்டில் அறிவிப்பதில் தாமதம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே விஜய் நடிக்கு தளபதி 64 படத்துக்கு டாக்டர் அல்லது சம்பவம் என்று பெயரிடப்பட உள்ளதாக நெட்டில் தகவல்கள் வந்த நிலையில் சம்பவம் பட தலைப்புக்கு மற்றொரு இயக்குனர் உரிமை கொண்டாடிய நிலையில் தற்போது டாக்டர் என்ற டைட்டிலை அவசர அவசரமாக சிவகார்த்திகேயன் படத்துக்கு வைத்திருக்கின்றனர் என நெட்டிஸன்கள் சிண்டு முடிந்து வருகின்றனர்.