சரித்திர படத்தில் திரிஷா முக்கிய வேடம்.. 2வது முறையாக மணியுடன் கைகோர்க்கிறார்..
By Chandru
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க பலரும் முயன்ற நிலையில் அது கனவாகவே இருந்து வந்தது. அதை சாத்தியமாக்க உள்ளார் இயக்குனர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக உள்ளது.
இதில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், கீர்த்தி சுரேஷ், ரேவதி, மோகன்பாபு என பல்வேறு நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.
நடிகை திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அதற்கான ஒப்பந்தம் கையெழுத் தானதாக பட தரப்பும் உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே ஆயுத எழுத்து படத்தில் மணி ரத்னம் இயக்கதில் திரிஷா நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் அவர் மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைகிறார். அதேசமயம் இப்படத்தில் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப் பட்டு வந்தது.
ஆனால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் பட தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவருகிறது.