இளம் ஹீரோவுடன் நெருங்கி நடிக்கமாட்டேன்.. ரஜினி நடிகை திடீர் அறிவிப்பு..

ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் பாலிவுட்நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் பிரபல வில்லன் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். இந்தியில் தபாங் 3ம் பாகம் படத்தில் சல்மான்கானுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை பிரபு தேவா இயக்கி உள்ளார். சல்மானுக்கு மற்றொரு ஜோடியாக 21 வயதுள்ள சையீ மஞ்ரேக்கர் நடித்திருக்கிறார்.

21 வயதுள்ள சையீ  50 வயது ஹீரோ சல்மான் கானுடன் நடிப்பதுபற்றி சோனாக்‌ஷியிடம் கேட்டபோது,' எல்லாம் ஹீரோக்களுக்கு அதிர்ஷ்டம்தான். ஆனால் அந்த அதிர்ஷ்டம் 50 வயதான ஹீரோயின்களுக்கு கிடைப்பதில் லை. என்னைவிட வயதில் இளைய நடிகருடன் நெருக்கமான காதல் காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு வாய்ப்பு வந்தால் அதை நான் ஏற்க மாட்டேன்.

50 வயதிலும் 20  வயது ஹீரோயின்களிடம் நெருக்கமாக நடிக்கும் அளவுக்கு கதாநாய கர்கள் உடற்கட்டைகட்டுக் கோப்பாக வைத்தி ருக்கிறார்கள். அதற்காக அவர்கள் என்ன உண்கிறார்கள், வேறு என்ன பயிற்சிகள் செய்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள்' என்றார்.

More News >>