சோனியா காந்திக்கு 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73வது பிறந்த நாள்.
டெல்லியில் நேற்று(டிச.8) நடந்த மிகப் பெரிய தீ விபத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தனக்கு வேதனையை தந்துள்ளதால், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சோனியா காந்திஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.