மூன்றுமுகத்துக்கு பிறகு பவர்புல் கேரக்டர்.. தர்பார் கேர்க்டர் பற்றி ரஜினி பேச்சு..
By Chandru
சென்னையில் நேற்று நடந்த ரஜினியின் தர்பார் பட ஆடியோ விழா பல்வேறு சலசலப்பு களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ரஜினிகாந்த்தே பல்வேறு விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியதாவது:
தர்பார் மும்பையில் நடப்பது போன்ற கதை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா, கஜினி ஆகிய படங்களை பார்த்து அவருடன் படம் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதுபற்றி அழைத்து பேசினேன். அப்போது நான் சிவாஜி படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அவர் இந்தியில் கஜினி படம் இயக்கினார். லிங்கா படத்தில் நடித்த பிறகு இனி இளமையான தோற்றத்தில் படம் நடிக்கக் கூடாதென்று நினைத்தேன். அதனால் அப்போது முதல் படம் பண்ணுவது தள்ளி போய் கொண்டே இருந்தது.
இடையில் என் வயதுக்கேற்ப காலா, கபாலி என படங்கள் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ் 90களில் இருந்தது போல் என்னைப் பார்க்க வேண்டும் என்று `பேட்ட' எடுத்தார். இளமையாகக் என்னை காண்பிக்க நினைத்து படத்தை இயக்கினார். அதைப் பார்த்து முடிக்கும் முன் ஒருவாரத்தில் அதேபோல் ஒரு ஸ்கிரிப்ட் உடன் முருகதாஸ் வந்திருந்தார். தர்பார் என்ற ஒரு அருமையான படத்தை முருகதாஸ் தந்திருக்கிறார். மூன்று முகம் படத்திற்கு அப்புறம் இப்படத்தில் ஃபவர் புல் கேரக்டரில் பண்ணி இருக்கேன்.
150 படங்கள் பண்ணியிருந்தாலும் த்ரில்லர் சஸ்பென்ஸில் தர்பார் ஒரு திருவிழாவாக இருக்கும். அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார் முருகதாஸ். தளபதி படத்திற்குப் பின் சந்தோஷ் சிவனுடன் இணைந்துள்ளேன். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் அவர் உள்ளாரா என கேட்பேன். 29 வருடங்களுக்கு பிறகு அவருடன் இணந்துள்ளது மகிழ்ச்சி. சந்திரமுகிக்குப் பிறகு நயன்தாராவுக்கு என்னுடய படத்தில் அருமையான கேரக்டர் செய்திருக்கிறார்.
அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் இருப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறேன். இளையராஜாவுக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த குணாம்சம் அனிருத்துக்கு இப்போதே வந்துள்ளது. பேட்ட ஆலபத்தை விட தர்பார் இன்னும் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு ரஜினி பேசினார்.