நடிகை ஜெனிலியா எழுதிய காதல் கடிதம்.. அன்புள்ள அம்மாவுக்கு..
By Chandru
தலையில் ஒருவரையொருவர் ஒருமுறை முட்டிக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்று சொல்லி ஜெயம் ரவி தலையில் இரண்டு முறை முட்டி சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் குறும்புத்தனமாக நடித்த நடிகை ஜெனிலியாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அவர் தனது தாயார் பிறந்த நாளில் அவருக்கு ஒரு காதல் அதாவது அன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள அம்மா.. நான் என் வாழ்வில் சந்தோஷமான , கடினமான தருணங்களை அனுபவித்தபோது என்னுடன் இருந்த ஒரே ஜீவன் நீங்கள்தான் அம்மா. நீங்கள்தான் எனக்கு என்றென்றைக்கும் நிலையானவர். உங்கள் ஒருவரால்தான் என் வாழ்வில் எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்ள முடியும்.
உங்களிடமி ருந்து அப்படி ஒரு இடத்தை நான் என்றுமே எடுத்துக்கொள்ள முடியாது. உங்களை இதயம் நிறைய காதலிக்கிறேன். உங்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.