லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார்.. 28 நாள் சிகிச்சைக்கு பிறகு குணமானார்..
இந்திய பாடகிகளின் அடையாளம் என்று போற்றப்படுபவர் லதா மங்ஷ்கர் (90). இவருக்கு சென்ற மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுபதிக்கப்ப ட்டார், காய்ச்சல், மூச்சு திணறால் அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. அதெல்லா வற்றையும் வதந்தியாகவேயாக்கிவிட்டு முழுமையாக உடல் நலம் தேறி உள்ளார். இதையடுத்து இன்று அவர் வீடு திரும்பினார்.
இது குறித்து டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்ட லதா ,சென்ற 28 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தேன். எனக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரிந்தது. முழுமையாக குணமான பிறகு வீடு திரும்புமாறு டாக்டர்கள் கூறினர்.
ஆண்டவன் ஆசீர்வாதத்துடன் வீடு திரும்பி இருக்கிறேன். எனக்காக பிரார்த் தனை செய்த நல விரும்பிகளுக்கு நன்றி . உங்கள் பிரார்த்தனைகள் பலன் அளித் துள்ளது. அனைவருக்கும் பணிவுடன் தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.