கனடா நாட்டு குடியுரிமை வாங்கிய ரஜினி வில்லன்.. பிரச்னையை தீர்க்க இந்திய குடியுரிமை..

ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் ஹீரோவாக பல படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் நடித்த மிஷன் மங்கள், ஹவுஸ்ஃபுல் 4ம் பாகம் ஆகிய 2 படங்கள் நல்ல வசூலை ஈட்டியது. கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் இவர் தனது ஓட்டை பதிவு செய்யவில்லை. கனடா குடியுரிமை பெற்றதால்தான் அவர் இங்கு ஓட்டு போடவில்லை என்று தகவல் வெளி யானது. அது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அதற்கான பதிலை தெரிவித் திருக்கிறார். இதுபற்றி அக்‌ஷய்கூறும்போது,

ஹீரோவாக வேண்டும் என்றுதான் சினிமா வில் நடிக்க வந்தேன். ஆனால் ஒரு கட்டத் தில் நான் நடித்த 14 படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன. இனி சினிமாவில் எதிர்காலம் இல்லை என நினைத்தேன். கனடாவில் இருந்த நண்பரிடம் பேசிய போது அவர் என்னை கனடா வரச் சொன்னதுடன் இருவரும் சேர்ந்து வேலை செய்வோம் என்றார். அவர் ஒரு இந்தியர் தான். இதனால் கனடா பாஸ்போர்டைப் பெற முயற்சி எடுத்தேன், பெற்றேன். இந்நிலையில் நான் நடித்த 15-வது படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். எனது கனடா பாஸ்போர்டை மாற்ற வேண்டும் என்றே எண்ணம் வரவில்லை.

ஒரு துண்டு காகிதத்தை வைத்து எனது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற சிலர் கமென்ட் செய்யும்போது என் மனம் வலிக்கிறது. ஆனால் நான் இப்போது இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித் துள்ளேன். விரைவில் கிடைத்துவிடும். நான் ஒரு இந்தியன், இந்தியாவில் வாழ்கிறேன். இங்கு வரி கட்டுகிறேன்.

இவ்வாறு அக்‌ஷய்குமார் கூறினார்.

More News >>