ரஜினியின் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ்.. மீனாவும் ஜோடி சேர்கிறார்..
By Chandru
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது.
ஏற்கெனவே ரஜினி நடித்த பேட்ட படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் 168வது படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்ற விவாதம் ஒடிக்கொண்டிருந்தது. அதில் குஷ்பு. நயன்தாரா. மீனா, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டுவந்தது. தற்போது மீனா. கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அதனை பட நிறுவனம் உறுதி செய்துள்ளது. காமெடி வேடத்தில் சூரி ஒப்பந்தமாகியுள்ளார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.
ரஜினி இப்படத்தில் இரட்டை வேடம் ஏற்பார் என்று தெரிகிறது. அதனால்தான் சீனியர் நடிகை மீனாவும். இளம் நடிகை கீர்த்தியும் நடிக்கின்றனர் என்று சிலரும், மீனா ரஜினிக்கு ஜோடியாகவும். அவர்களது மகளாக கீர்த்தி சுரேஷும் நடிக்கலாம் என்று சிலரும் தங்கள் யூகத்தை இப்போதே வெளிப்படுத்தி உள்ளனர்.