நந்தினி சீரியல் நடிகைக்கு மறுமணம்.. ஆஸ்திரேலிய தொழில் அதிபரை மணந்தார்..
By Chandru
டிவியில் ஒளிப்பரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா ராம்.
குஷ்பு நடித்த லட்சுமி ஸ்டோர் சீரியலிலும் நடித்திருந்தார். நித்யாவின் அழகை ரசிகர் வர்ணித்ததுடன் அவரது நடிப்பையும் பாராட்டினார்கள். நித்யாவுக்கு வினோத் கவுடா என்பவருடன் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.
பின்னர் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிநதனர். சட்டப்படி கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றனர். நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நித்யாவுக்கும் ஆஸ்திரேலியா தொழில் அதிபர் கவுதமுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. புதிய ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.