ஆர்யாவின் காதலியான சாயிஷா.. திருமணத்துக்கு பிறகு புதிய படத்தில் ஜோடி.
நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தார் சாயிஷா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, வனமகன் போன்ற படங்களில் சாயிஷா நடித்திருக்கிறார். தவிர தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யாவுடன் அவர் நடித்த காப்பான் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் ஆர்யா நடித்திருந்தபோதும் சூர்யாவுக்குத்தான் சாயிஷா ஜோடியாக நடித்திருந்தார்.இந்நிலையில் ஆர்யா, சாயிஷா ஜோடியாக டெடி என்ற புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். நிஜத்தில் கணவன் மனைவியாகிவிட்ட ஆர்யா, சாயிஷா இப்படத்தில் காதல் ஜோடிகளாக நடிக்கிறார்களாம்..இப்படத்தை சக்தி சவுந்திரராஜன் இயக்கி உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.