கோல்டன் குளோப் விருதுக்கு ஒத்த செருப்பு.. பார்த்திபன் ஒருவராக நடித்து இயக்கிய படம்..

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய படம் ஒத்தசெருப்பு. இப்படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது தேர்வு பரிந்துரைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டார். ஆனால் கல்லிபாய் என்ற இந்தி படம் அந்த பிரிவில் தேர்வானது. ஆனாலும் தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் நியமனத்திற்கு தனது படத்தை அனுப்ப பார்த்திபன் கடுமையாக முயற்சிமேற் கொண்டார். இந்நிலையில் 63 நாடுகளிலிருந்து 92 வெளிநாட்டு படங்கள் கோல்டன் குளோப் விருதுக்காக இந்த ஆண்டு தேர்வாகியிருக்கிறது அதில் பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் டுலெட் தமிழ் படங்களுடன் கல்லி பாய், போட்டோகிராப் பாபா ஆகிய வேறு மொழி படங்களும் தேர்வாகியிருக்கின்றன.
More News >>