எனது குரு உத்வேகம் ரஜினிதான்.. நயன்தாராவின் சூப்பர் வாழ்த்து..
By Chandru
ரஜினியுடன் தர்பார் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் 2020 பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ரஜினியின் 70 வது பிறந்தநாளை யொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், 'எனது உத்வேகமாக இருப்பவர் நீங்கள் தான். எனது குரு, தலைவரும், ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு உரித்தாகட்டும்' என தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ள வாழ்த்தில்,'ரஜினிசாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியடனும், சந்தோஷமுடனும் எப்போதும் வாழ வேண்டும். எங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றைக்கும் நிலையான உத்வேகம் நீங்கள்தான்.
உங்களுடைய திரையுலக பயணத்தில் பங்கெடுக்க ஒரு சிறு பங்கு எனக்கும் கிடைத்ததற்காக மிகவும் சந்தோஷம் அடைகிறேன்' என தெரிவித்திருக்கிறார்.