காமெடி நடிகரின் கல்யாண பரிசு.. பல வருட கனவு பலித்தது..
By Chandru
நகைச்சுவை நடிகர் சதீஷ் இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்த போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் இருந்தது.
அதேபோல் திருமணத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்த சதீஷுக்கு சிந்து என்பவருடன் நேற்று சென்னையில் திருமணம் நடந்தது. மனைவி வந்த ராசி அவருக்கு பெரிய பரிசும் கையோடு வந்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தில் நடிக்க சதீஷுக்கு நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிறார். ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தகவலை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்த சதீஷ், தனது மகிழ்ச்சியை இணைய தளத்தில் ஸ்டேட்டஸாக வெளியிட்டிருக்கிறார். அதில், 'தலைவரின் வெறித்தனமான ரசிகனுக்கு கிடைத்த வேற லெவல் திருமண பரிசு. பல வருட கனவு நிஜமான நாள். நன்றிகள் பல' என குறிப்பிட்டிருக் கிறார்.
மேலும் இப்படத்தில் ஏற்கனவே மற்றொரு காமெடி நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.