விஜய்சேதுபதி மீது ரித்விகாவுக்கு வந்த ஈர்ப்பு..பட வாய்ப்புக்கு வலை வீசுகிறாரா?
By Chandru
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் ரித்விகா. மீண்டும் ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்தார். போதை மருந்துக்கு அடிமையாகி பின்னர் மீண்டு ரஜினிகாந்த் மீது மகள் போல் அன்புகாட்டும் மாறுபட்ட பாத் திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ரித்விகா நடித்த குண்டு படம் திரைக்கு வந்தது. அப்போது அவரிடம், 'உங்களுக்கு எந்த நடிகர் மீதாவது கிரஷ் (ஈர்ப்பு) உள்ளதா?' என்று கேட்டதற்கு பதில் அளித்தார். 'எனக்கு விஜய்சேதுபதி மீது கிரஷ் உண்டு. சிஐடி சங்கர் நடிகர் ஜெய்சங்கர் மீதும் கிரஷ் இருந்தது' என்றார்.
விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகிவிட்டது இப்போது போய் அவர் மீது ஈர்ப்பு இருக்கிறதே என்று ரித்விகா சொல்வது ஏன்? பிக்பாஸில் இருந்த பழக்கதோஷ்மா என்றும் அல்லது விஜய்சேதுபதி படத்தில் வாய்ப்பு எதிர்பார்க்கிறாரா என்ற சிலர் கமென்ட் செய்திருக்கின்றனர்.