கமலை சந்தித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்.. டிஷர்ட் தந்து நலம் விசாரிப்பு..
By Chandru
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகரு மான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அவரை முக்கியஸ்தர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் பிராவோ சென்னை வந்திருந்தார். அவருக்கு பிரபல நிறுவனம் சார்பில் குளோபல் ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன் விருது வழங்கப்பட்டது. பின்னர் பிராவோ நடிகர் கமலை சந்திக்க விரும்பினார். அதன்படி கமலை நேரில் சந்தித்து அவரது உடல் நலம் பற்றி விசாரித்து விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது தன் கையெழுத்திட்ட டிஷர்ட் ஒன்றை கமலுக்கு பிராவோ அளிக்க அதை கமல் அன்புடன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.