பிரிட்டன் தேர்தலில் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் அமோக வெற்றி பெற்றது. எனவே, போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார். இந்நிலையில், நமது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு நிறைந்த பாராட்டுகள்.
அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், இந்தியா - பிரிட்டன் இடையே நெருக்கமான நல்லுறவு நீடிக்க அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.