தெலுங்கில் அஜீத்தை அறிமுகம் செய்த இயக்குனர் காலமானார்.. 250 படங்களிலும் நடித்தவர்..
By Chandru
தமிழ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் அஜீத், பிரேமா புஸ்தகம் என்ற ஒரு தெலுங்கு, மற்றும் அசோகா, இங்லிஷ் விங்லிஷ் என 2 இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். பிரேமா புஸ்தகம் படத்தை இயக்கியவர் கொல்லப்புடி மாருதிராவ் (வயது 80). இவர் சென்னை யில் நேற்று மரணம் அடைந்தார். தமிழில், சிப்பிக்குள் முத்து மற்றும் தெலுங்கில் சேலஞ், லீடர், அபிலாஷா உள்பட சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள் ளார் மாருதி ராவ்.
சென்னை தி.நரில் உள்ள வீட்டில் வசித்து வந்த மாருதிராவ் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வா் சந்திரசேகரராவ் இரங்கல் தெரிவித்துள்ளனர். மற்றும் பல்வேறு நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர். மாருதிராவ் இறுதிச் சடங்கு சென்னையில் நாளை(ஞாயிறு) நடக்க உள்ளது.