3 பாகம் படத்துக்கு தயாரான சிவகார்த்திகேயன்...ஹீரோ பட விழாவில் பேச்சு..
By Chandru
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்ததில் உற்சாகமாகிவிட்டார்.
அடுத்தடுத்து படங்களுக்கு தயாராகிக்கொண்டிருப்பதுடன் முகத்தில் மாஸ்க் அணிந்து ஹாலிவுட் ஹீரோ பாணியில் ஹீரோ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பி. எஸ். மித்ரன் இயக்குகிறார்.
இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை வெளியிட எந்த விஐபி வந்திருக்கிறார் என்ற ரசிகர்கள் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த நிலையில் ரசிகரே ஒருவர் டிரெய்லரை வெளியிட்டது ஹைலைட்டாக அமைந்தது. ஹீரோ படத்துக்காக நடந்த பிளேஹீரோ கான்டஸ்ட் என்ற போட்டியில் வெற்றி பெற்ற ஈரோட்டை சேரந்த கோகுல்தான் அந்த ரசிகர்.
இதில் பேசிய சிவகார்த்திகேயன், 'நான் கல்லூரிநாட்களில் யுவன் பாடல்கள் கேட்காத நாட்களே கிடையாது. அவர் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் அவரை யாரும் தொடமுடியாது. நான் நடித்த படங்களிலேயே ஹீரோ படம்தான் பின்னணி இசையில் மிகச் சிறந்தது என்று யுவன்சங்கர்ராஜா என்றிடம் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது.
ஹீரோ படம் வெற்றி அடைந்தால் அப்படத்தின் இரண்டு மற்றம் மூன்றாம் பாகங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன். இப்படத்தில் முக்கிய வேடத்தில் அர்ஜூன் நடித்திருக்கிறார் அவர் நடித்த ஜெய்ஹிநத் படத்தை பார்த்து நான் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு அப்படத்தில் பிரமாதமாக இருக்கும்' என்றார்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, இயக்குனர் பி.எஸ்.மித்ரன், கதாநாயகி கல்யாணிபிரியதர்ஷன் பங்கேற்றனர்.