லேப்ராடர் நாய் நடிக்கும் அன்புள்ள கில்லி.. அருண்ராஜ் காமராஜ் குரலில் பாடல், ..
By Chandru
பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா. இவர், 'அன்புள்ள கில்லி' முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் லேப்ராடர் நாய் ஒன்றும் நடிக்கிறது. பெயரிலிருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாக ஆரம்பித்துவிட்டது.
இப்படம் பற்றி இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் கூறும்போது, 'ஒரு சிறுவனுக்கும் ஒரு நாயுக்கும் ஏற்படும் நட்பை, உறவை, அழகான அன்பை சொல்லும் படமே 'அன்புள்ள கில்லி'. இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை கொண்டிருக்கிறது.
மேலும் நாயின் மனகுரலில் கதை நகர்வதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது யுவன்சங்கர்ராஜா குரலில் உருவான இப்படத்தின் முதல் சிங்கிள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது இரண்டாவது சிங்கிள் ரிலீஸாகவுள்ளது.
அரோல் கொரோலி இசையில், அருண்ராஜ் காமராஜ் குரலில், இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் வரிகளில் “வானம் மேலே , பூமி கீழே “ என்ற இப்பாடல், இயந்திரங்களுக்கெதிராக இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாக உருவாகியிருக்கிறது.
ஶ்ரீநிதிசாகர், மாலா இப்படத்தை தயாரிக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கொடைக்கானலில் அழகிய வண்ணமயமான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.