அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்
அஜீத்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தை இயக்கியிருந்தார் கவுதம் மேனன். இதில் திரிஷா, அனுஷ்கா நடித்திருந்தனர். படம் வெளியாகி 4 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் வசூல் பற்றி தயாரிப்பாளருக்கும். இயக்குனருக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் பற்றி தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை கூறியிருந்தார்.
அதுபற்றி கவுதம் மேனன் கூறும்போது இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தின் வசூலை குறைத்து சொல்வது போல தோன்றுகிறது என்று சந்தேகம் கிளப்பியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே அளித்த பேட்டிகளில் படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைக்கவில்லை என்று கவுதம் மேனனே குறிப்பிட்டிருக்கிறார் என்பதை முரணாக பார்க்கின்றனர் திரையுலகினர்.
இந்நிலையில் கவுதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.