கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
சமீபத்தில் சென்னையில் நடந்த ரஜினியின் தர்பார் ஆடியோ விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், 'சிறுவயதில் நான் ரஜினியின் தீவிர ரசிகன். கமல் போஸ்டர் மீது சாணியடித்திருக்கிறேன்' என்றார். இது சர்ச்சையானது. இந்நிலையில் கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் பேசினார் லாரன்ஸ் அப்போது,'எனக்கு கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. கால பைரவா படத்தில் பிஸியாக இருந்ததால் கமல் பட வாய்ப்பை நான் ஏற்கவில்லை என்றார்.
தற்போதைக்கு லாரன்ஸ் இந்தியில் காஞ்சனா படத்தை இயக்கி வருகிறார். இதில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். அப்படத்துக்கு லட்சுமி பாம் என பெயரிடப்பட்டிருக்கிறது.