கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
By Chandru
சிறுபட்ஜெட் படங்கள்என்றால் ஒரு சிலர் விஜய்சேதுபதியை அழைத்து தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டிரெய்லரை வெளியிடச் சொல்வார்கள். தற்போது தானே நடித்திருக்கும் கடைசி விவசாயி படத்தின் டிரெய்லரை அவரே தனது இணைய தள டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தேசிய விருதை தட்டி வந்த காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் கடைசி விவசாயி படத்தை இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கியவர்.
கடைசி விவசாயி படத்தின் டிரெய்லரில சுவாரஸ்யம் அதிகம். குரங்கு ஒன்றிற்கு வாழைப்பழம் கொடுத்தபடி விஜய்சேதுபதி பேசும் வசனம் கவனத்தை கவர்வதுடன், பில்கேட்சிடம் பேசிவிட்டாயா என்று ஒருவர் கேட்க, நான் பேசிட்டேன் அவர்தான் என்னோட பேசல என்று காமெடி வசனத்தோடு இந்த டிரெய்லர் வெளியாகிறது.